Tuesday, February 3, 2009

என் ஹஜ் பயண அனுபவங்கள் - 4

ஹஜ்ஜுக்கு அப்ளிகேஷன் போடும் போது நாம் கட்டக்கூடிய பணம் தலைக்கு 11,000 ரூபாய் மட்டுமே. சீட் கிடைத்துவிட்டால், மீதிப் பணம் கட்ட வேண்டும். சீட் கிடைக்காவிட்டால், அவர்களே திருப்பி அனுப்பி விடுவார்கள். வெயிட்டிங் லிஸ்ட் என்று ஒரு 100 அல்லது 200 பேரை தேர்ந்து எடுத்து இருப்பார்கள். அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இறப்பு, பணப்பற்றாக்குறை போன்ற ஏதேனும் காரணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக முடியாவிட்டால், இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

எங்கள் பணப்பிரச்சினையை இறைவனிடம் முறையிட்டோம். திடீரென்று ஒரு நாள் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு இடத்தை விலைக்குக் கேட்டார். யாரிடமும் நாங்கள் சொல்லி வைக்கவில்லை. எந்த புரோக்கரும் வரவில்லை. எப்படியோ கேள்விப் பட்டு தானாக வந்து விட்டார்கள். கேட்ட விலையும் நல்ல விலை. ஒரே வாரத்தில் கிரயம் என்று வேறு சொன்னார்கள். நாங்கள் உடனே பேசி முடித்து விட்டொம்.

அதன்படி பணம் ரெடியாகிவிட்டது. பணம் கட்ட லெட்டர் வந்த மறு நாளே, ஒரு மாதம் டைம் இருந்த போதிலும், நாங்கள் கொண்டு போய் வங்கியில் செலுத்தி விட்டோம். பணம் கட்டிய ரசீதை 2 காபி எடுத்து, சென்னை ஹஜ் கமிட்டிக்கும் ஒன்று மும்பை ஹஜ் கமிட்டிக்கு ஒன்றுமாக அனுப்பி வைத்தோம்.

இனி புறப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடங்க வேண்டும். நெருங்கிய சொந்த பந்தங்கள் வீட்டிற்கு சென்று சொல்லி வருவது மரபு. எல்லார் வீட்டுக்கும் போய் முஸாபா செய்து வர வேண்டும். முஸாபா என்றால் கை கொடுப்பது போல இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்து முகமன் கூறுவது. நாம் சென்று வந்த அனைவரும், நாம் செல்லும் முன் ஒரு முறை, சென்று வந்த பின் ஒரு முறை நம் வீட்டில் நம்மை வந்து சந்தித்து செல்வார்கள்.

அது போக, நாங்கள் புது வீடு குடி வந்ததற்கு யாரையும் அழைக்கவில்லை. அதனால், இந்த சாக்கில் ஒரு விருந்து ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். கிளம்புவதற்கு முதல் நாள் விருந்து வைக்கலாம் என்றால், கிளம்பும் தேதி இன்னும் வரவில்லை.

சரி, கடைசி நேரத்தில் எல்லாரும் வந்து போய்க் கொண்டிருக்கும் போது, சாமான்கள் வாங்குவது, அடுக்குவது செய்ய முடியாது என்பதால், முதலில் அதை செய்துவிட முடிவு செய்தோம்.

நாங்கள் கொண்டு சென்ற பொருட்கள் லிஸ்ட் இதோ:

துணிமணிகள்:

எனக்கு: பர்தா - 2 செட்(போகும் போது போட்டுக் கொள்வது சேர்த்து), மக்கனா - 2 (புர்காவின் மேல் அதையே போட்டுக் கொண்டேன்), சேலை புதியது - 1 (ஹஜ் பெருநாள் அன்று உடுத்த), சுடிதார் புதியது - 1 (மதினா செல்லும் போது உடுத்த), நைட்டி - 4, நைட்டிக்கு ஷால் - 4, உள்ளாடைகள் - 4 செட், தலைக்கு கட்டும் துணி - 2, சுவட்டர், கிளவுஸ், சாக்ஸ், சால்வை.

மச்சானுக்கு: புது சர்ட் - 2, புது லுங்கி - 2, புது பேண்ட் - 1, சர்ட் - 3, லுங்கி - 2, தொப்பி - 2, சால்வை, இஹ்ராம் உடை - 2 செட், கர்சீப் மற்றும் உள்ளாடைகள்.

மாமனாருக்கு: சர்ட் - 3, லுங்கி - 3, புது சர்ட் - 2, புது லுங்கி - 2, தொப்பி - 2, இஹ்ராம் உடை - 2 செட், மங்கி கேப், கிளவுஸ், சாக்ஸ், சுவட்டர், கண் கண்ணாடி எக்ஸ்ட்ரா - 1, மற்றும் உள்ளாடைகள்.

பொது சாமான்கள்: (மூன்று பேருக்கானது)

பெட்ஷீட் - 2, ஜமுக்காளம் - 1, ஏர்பில்லோ - 3 (ஆனால் இம்மூன்று பொருட்களும் தேவைப்படவே இல்லை),

ஹஜ் உம்ரா விளக்க புத்தகம், தொழுகை விரிப்பு - 3, தவாப்மணி - 3, சிறிய கைப்பை - 3, செருப்பு போடும் பேக் - 3, 10 லி ஜம் ஜம் தண்ணீர் கேன் - 3 ( இவை சென்னை சென்றதும் ஹஜ் கமிட்டியில் தந்தார்கள்),

துண்டு - 3, சன்னமான துண்டு - 1, குரான் - 1, அல் ஹிஸ்புல் அஃளம்(துவா புக்), மிஸ்வாக் -3, சுர்மா, செண்ட், குளியல் சோப் - 3, சீப்பு, கண்ணாடி, பவுடர், தேங்காய் எண்ணை - 100 மிலி, நீலம், வாஷிங் பிரஸ், ஷாம்ப், ரின்சோப்பு - 2, சர்ப் எக்ஸெல் - 1/2 கிலோ, ரேசர், டபுள் பிளேடு, நகவெட்டி, சிறிய கத்தரிகோல், ஊசி நூல், பேனா கத்தி, செல்போன், சார்ஜர், சர்ட் மாட்டும் ஸ்டிக்கர், டார்ச், கேரி பேக், நைலான் கயிறு, பாத்திரம் தேய்க்கும் நாறு, பாத்திரம் கழுவும் சோப் - 3, சில்வர் நார், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, விஸ்பர் நேப்கின் - 2 பேக், டூத் பிரெஷ், பேஸ்ட், மார்க்கிங் பேனா - 2, பபுள்கம்(ப்ளைட் ஏறும் போது, இறங்கும் போது காது வலி வராமலிருக்க மெல்லுவதற்கு), தர்மா மீட்டர், வெள்ளை பேப்பர், சிறிய நோட்டு, டைரி, பேனா, ப்ளாஸ்டிக் கோப்பை, சிறிய பூட்டுகள் - 4, துணிப்பை - 2, பிளைட் டிக்கட், தைலம் அல்லது விக்ஸ், பிளாஸ்டிக் ஷீட், அலுமினியம் பாயில் மற்றும் பிளாஸ்டிக் டிஸ்போசபில் பாக்ஸ் - 25, ரப்பர் பேண்ட், பாலிதீன்கள், பிரவுன் நிற ஒட்டும் டேப், பழைய துணி, வாஸ்லின்.

சமையல் பாத்திரங்கள்:

7 1/2லி குக்கர் - 1, இண்டக்‌ஷன் அடுப்பு, வடைசட்டி - 2 (பெரியது 1, சிறியது - 1), தோசைசட்டி, ஓட்டை கபூரி, கரண்டி - 3, அன்னக்கை - 1, ஸ்பூன் - 3, சாப்பிடும் தட்டு - 3, சிறிய டம்ளர் - 2, பெரிய டம்ளர் - 2, டீ டபரா - 2, டீ வடிகட்டி - 1, டீ வைக்கும் டோங்கா - 1, இடுக்கி - 1, கத்தி, வெஜ்.கட்டர், வெங்காயம் நறுக்குவது, ரொட்டி கோல், சிறிய பிளாஸ்டிக் விரிப்பு( ரொட்டி தேய்க்க), பிளாஸ்டிக் காய் வடிகட்டி, ஸ்பான்ச், குழம்பு குண்டா - 3 (ஒன்றுக்குள் ஒன்று போகும் படி, மூடியுடன்), சாசர் - 2, கொட்டரா - 2, சேஃப்டி வால்வ், கேஸ்கட்.

சமையல் சாமான்கள்:

பொன்னி அரிசி - 12 கிலோ, சீரகசம்பா அரிசி - 3 கிலோ, பாஸ்மதி அரிசி - 2 கிலோ, புளி - 1/2 கிலோ, வரமிளகாய் - 50 கிராம், உப்பு - 2 கிலோ, ஹார்லிக்ஸ் - 1/2 கிலோ, 1 1/2 கிலோ பூண்டு 1/2 கிலோ இஞ்சி அரைத்து செய்த பேஸ்ட், சுண்டல் - 1/4 கிலோ, அவரைக் கொட்டை - 1/4 கிலோ, ரவை - 1 கிலோ, சேமியா - 9 * 200 பாக்கிட், நூடில்ஸ் 4 கொண்ட பேக் - 5, அணில் ரவா தோசை மிக்ஸ் - 2 கிலோ, டீ தூள் - 1/4 கிலோ, தாஜ் மஹால் டீ பேக்ஸ் - 50 எண்ணிக்கை, அஸ்கா - 1 கிலோ, கோதுமை மாவு - 3 கிலோ, மைதா - 1 கிலோ, சோடா உப்பு, 50, மக்ரோனி - 1 1/2 கிலோ, கார்ன் புளோர் - 1/2 கிலோ, தோசை மிக்ஸ் - 1 கிலோ, பட்டை கிராம்பு ஏலம் - 100 கிராம், அஜினா மோட்டா - 50 கிராம், சிவப்பு பவுடர், பூண்டு - 1/4 கிலோ, பெரிய வெங்காயம் - 3 கிலோ, நல்லெண்ணெய் - 1/2 லி, சமையல் எண்ணெய் - 3 லி, தக்காளி - 2 கிலோ, காய வைத்த கருவேப்பிலை, உப்புக் கண்டம் ( தட்டி நெய்யில் பொறித்து எடுத்து கொண்டேன், கடைசி வரை கெடவே இல்லை), ஊறுகாய், கருவாடு, அப்பளம், கஞ்சி வடகம், ஆணத்து வடகம், கடுகு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ, நெய் - 1/4 கிலோ, தேங்காய் பவுடர் - 1/2 கிலோ(எஸன்ஸ் கடையில் கிடைக்கும்), பால் பவுடர் - 1 கிலோ, MTR ரெடிமிக்ஸ் பொங்கல், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜ்புலாவ், உப்புமா ஒவ்வொன்றும் 3 பாக்கிட்(மினாவில் சாப்பிட), புளி பேஸ்ட், வரமிளகாய் தூள் - 100 கிராம், கறிமசால் பொடி - 50 கிராம், ரசப்பொடி - 50 கிராம், மஞ்சள் தூள் - 50 கிராம், வத்தல் குழம்புப் பொடி - 100 கிராம், சாம்பார் தூள் - 100 கிராம், மல்லித் தூள் - 100 கிராம், புளியோதரைப் பொடி - 100 கிராம், லெமன் சாதப் பொடி - 100 கிராம், சில்லிச்சிக்கன் 65 மசாலா - 100 கிராம், சீரகத் தூள் - 50 கிராம், மிளகுத் தூள் - 50 கிராம், பருப்பு சாதப் பொடி - 50 கிராம், பட்டை கிராம்புத் தூள், ஏலக்காய் தூள்,

மற்றும் பொதுவான மாத்திரைகள், மாமனாருக்கு மாத்திரைகள் இன்சுலின் மற்றும் குளுகோ மீட்டர்.

கொண்டு போனதில் புளி, பொடி ஐட்டம் தவிர எதுவும் மிச்சமாக வில்லை. அரிசி 2 கிலோ மீதியானதை ரூம் மேட்டுக்கு கொடுத்து விட்டோம் (அவருக்கு பற்றவில்லை). வாஷிங் மெஷினில் துவைத்ததால், சோப்புத் தூள் பற்றவில்லை, சோப் மீதியாகிவிட்டது. மற்றபடி சமையல் எண்ணெய் போதவில்லை, மக்காவில் வாங்கினோம்.

அங்கு எல்லாப் பொருட்களும் கிடைக்கும் என்றாலும், முதன்முதலில் அந்நிய தேசத்தில் நமக்கு ஒன்றும் புரியாது, தேடி, தேடி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். விலை அப்படியே இரண்டு மடங்கு இருக்கும். அதுவும் ஹஜ் சமயத்தில் வாய்க்கு வந்த விலை சொல்வார்கள். பெட்டிக் கடையில் கூட பேரம் தான்.

சூட்கேஸ், பேகுகள், மற்றும் எல்லாப் பொருட்களும் வாங்கி வந்து சேர்க்கவே ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. நைட்டியில் மேல் பாக்கிட்டும், மற்றும் புர்காவில் கீழே இருபுறமும் பாக்கிட் வைத்து தைத்துக்கொண்டேன், பணம், செல்போன் வைக்க.

பாக்கிங்கில் நடந்த குளறுபடியை அடுத்து சொல்கிறேன்.

8 comments:

Jaleela Kamal said...

சுஹைனா நல்ல பொருமையா எல்லா சாமானையும் யோசித்து யோசித்து எடுத்து போயிருக்கிறீர்கள்.
எப்படிதான் சமைத்து கொண்டு அங்கு போக முடிந்தது உங்களுக்குன்னு தெரியல.
ஓவ்வொரு வேளையும் சமைத்து விட்டு செல்ல டைம் இருந்துச்சா?
ரொம்ப அருமை.
ஜலீலா

தாஜ் said...

மினாவில் சாப்பாட்டிற்கு ஹஜ் கமிட்டியில் கூப்பன் தரவில்லையா?என் அம்மா போனவருடம் ஹஜ் கமிடியில்தான் வ்நந்தார்கள் ஆனால் சமயல் செய்யலை வாங்கிதான் சாப்பிட்டார்கள் காலை டிபன் மட்டும் எதாவது செய்து கொள்வார்கள்.சமைப்பதால் இபாதத் பாதிக்கபடுமே நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்

Anonymous said...

சுஹைனா,

இந்த செக் லிஸ்ட், எல்லாருக்கும் பயன்படும். நல்ல பொருமை தான் உங்களுக்கு. இந்தியா வரும் பொழுது கட்டாயம் உங்களை சந்திக்க வேண்டும்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சுஹைனா! உங்களின் பதிவுகளில் ஒன்றுவிடாமல் படித்து வருகிறேன். சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு அழுதேவிடுகிறேன். காரணம், என் ஹஜ் கனவுகள் எப்போது நிறைவேறுமோ என்ற ஏக்கம்! அல்லாஹ்தான் விரைவில் நிறைவேற்றவேண்டும், இன்ஷா அல்லாஹ்!

Anonymous said...

சுஹைனா,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.எழுதும் நடை அனைவரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை.ஆவலுடன் அடுத்த தொடருக்காக காத்துக்கொண்டிருக்கும், உங்கள் எழுத்தை ரசிக்கும் தோழி.

Anonymous said...

உங்க பதிவுகளுக்கு நன்றி. அதிகம் பேர் இந்த கட்டுரையால் பயன் பெற வேண்டும், என்பது என் ஆசை.
ஜலீலாக்கா மற்றும் தாஜ், உங்கள் கேள்விகளுக்கு இங்கு ஒரு வரியில் பதிலளித்தால் சரிவராது. இனி வரும் அத்தியாயங்களில் அதற்கான பதில் வரும்.

afrine said...

சுஹைனா மிகவும் அருமை. எனக்கு மட்டுமல்ல ஹஜ் செல்பவர்களுக்கு மிகவும் அருமையான விளக்கம். நல்ல காரியம் செய்துள்ளீர்கள்

rasia said...

எப்படி சுஹைனா எல்லா பொருட்க்களைய்யும் ஒன்று விடாமல் எழுத முடிகிறது?படிக்க ரொம்பவும் சுவாரசியமா இருக்கு!அல்லா எங்களுக்கும் அங்கு கால் பதிக்க உதவி புரிவானாக!